Wednesday, October 1, 2008

புதுவை இளவேனில்

புதுவை இளவேனில் 1973ல் பிறந்தவர். புகைப்படத் துறையில் பதினைந்து வருட அனுபவம் கொண்ட இவர் மற்ற புகைப்பட நிபுணர்களிடமிருந்து வேறுபடுவது இவரது இலக்கிய ஆர்வமும் புகைப்பட ஆவண ஆர்வமும் இணைந்ததன் முனைப்பால்தான். இவர் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன் பறை (2003), Breaking the Shackles (2004) ஆகிய குறும்படங்களில் நிச்சலனப் புகைப்படக்காரராக பங்காற்றியுள்ளார். இதுவரை இவர் ஆவணப் புகைப்படங்களாக கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, மு. கருணாநிதி, ரவிகுமார், பாமா, வில்வரத்தினம், உள்பட மூத்த மற்றும் நவீன படைப்பிலக்கியவாதிகளை பதிவு செய்துள்ளார். ரகுநாத் மானெட்டின் நாட்டிய அசைவுகளையும், கர்நாடிக் இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியனை பதிவு செய்த அனுபவமும் இவருக்கு உண்டு.


புதுவை இளவேனில் குழந்தைகளின் உலகத்தைப் பதிவு செய்யும் 'விளிம்பில்' (24 நிமிடங்கள்) மற்றும் ஓர் அந்தகச் சிறுவனின் வாழ்வைச் சொல்லும் 'கண்களுக்கு அப்பால்' (30 நிமிடங்கள்) ஆகிய குறும்படங்களைத் தயாரித்துள்ளார். இவற்றில் 'கண்களுக்கு அப்பால்' ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையில் நிகழ்ந்த சர்வதேசக் குறும்பட விழாக்களில் திரையிடப்பட்டது.


கவிதைகள் எழுதுவதிலும், பல்வேறு இடங்களையும் புகைப்படங்களாகப் பதிவு செய்யும் பயணங்களை மேற்கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் தன்னை முன்னிறுத்துகிறார்.

No comments: